Wednesday, 27 March 2013

செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு (chettinad ennai kathirikai kulambu)

chettinad ennai kathirikai kulambu in Tamil

தேவையான பொருட்கள்: 

அரைக்க:
  • சின்ன வெங்காயம் 
  • வரமிளகாய் 
  • பூண்டு 
  • சீரகம் 
  • மிளகு 
  • கொத்தமல்லி தூள் 
  • கருவேப்பிலை 
  • தேங்காய் 

தாளிக்க:  
  • சின்னவெங்காயம் 
  • பச்சைமிளகாய் 
  • கருவேப்பிலை 
  • தக்காளி 
  • புளிகரைசல் 
  • மஞ்சள்தூள் 
  • எண்ணெய் 
  • கடுகு 
  • உப்பு 

செய்முறை: 
  1. தாளிக்க கொடுத்துள்ள பொருட்களில் தேங்காயை தவிர எல்லா பொருட்களையும் சேர்த்து எண்ணெய் ஊற்றி வதக்கி வதக்கிகொள்ளவும் . 
  2. அதை ஆற வைத்து தேங்காய் சேர்த்து விழுதாக அரைத்துகொள்ளவும் . 
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு சேர்த்து பொரிந்ததும் வெங்காயம்,பச்சைமிளகாய்,கருவேப்பிலை,தக்காளி,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கிகொள்ளவும் . 
  4. அதனுடன் நான்காக கிறிய கத்திரிக்காயை போட்டு நன்றாக வதக்கவும் . 
  5. வதக்கியதும் அரைத்த விழுதை சேர்த்து வதக்கி அதனுடன் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும் . 
  6. கொதித்ததும் புளிகரைசல் ,உப்பு சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி விடவும் . 
சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு ரெடி. இதை சூடான சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் .

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.